குடை மிளகாயின் நன்மைகள் பற்றி தெரியுமா…? இதுவரை அறிந்திராத உண்மைகள்….!!!
குடை மிளகாய் நாம் அனைவரும் அறிந்த காய்கறி தான். இந்த காய்கறி நமது அருகாமையில் சந்தைகளில் மிக மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது நமக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க கூடியது.
சத்துக்கள் :
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாது சத்துக்கள் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் உள்ளது.
பயன்கள் :
கண் பார்வை :
கண்பார்வையை சிறப்பாகவும், இளமையிலேயே கண்பார்வை பிரச்சனைகள் அண்ட விடாமலும் தடுக்கிறது. கண்ணுக்கு இது மிகவும் ஆரோக்கியத்தை வல்லது.
கூந்தல் வளர்ச்சி :
குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. கூந்தலின் நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கிறது. கூந்தலின் கருமையை அதிகரிக்க செய்கிறது.
அஜீரண கோளாறு :
குடை மிளகாயை உணவில் சேர்த்து கொள்ளும் போது வயிற்று கோளாறுகளை நீக்குகிறது. வயிற்று பிரச்சனைகளை நீக்குகிறது.
உடல் எடை குறைப்பு :
உடல் எடையை குறைப்பதில் இந்த காய்கறி முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இதில் கொலஸ்ட்ரால், சோடியம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனளிக்கிறது.