புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பிந்த்ரே நலம் பெற்று வீடு திரும்பினார்…!!!
காதலர் தின பட நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் மெட்டாஸ்டேட்டிக் எனப்படும் பரவும் தன்மை கொண்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தங்கி கீமோ தெரப்பி சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோய் பாதிப்பிலிருந்து நலம் பெற்று இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவி நலம் பெற்று தாயகம் திரும்பியதாக சோனாலி பிந்த்ரே கணவர் கோல்டி பெல் கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in