போலீஸ் கொடுத்த ஐடியா…சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு…வீடு திரும்பிய மாணவன்…!!

Default Image
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதுடைய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான எதீசம் பிலால் கடந்த அக்டோபர் மாதம் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் பல்வேறு இடங்களிலும்  தேடியும் கிடைக்கவில்லை.பயங்கரவாத அமைப்பின் கொடியுடன் இருந்த எதீசம் பிலாலின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வரலானதை கண்டு அதிர்ச்சி பெற்றோர்  இது குறித்து போலீஸ் உதவியை நாடினர். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி சமூக வலைத்தளம் , ஊடகங்கத்தில்  “நீ எங்களின் ஒரே மகன். பெற்றோரின் பொற்பாதம் தான் சொர்க்கம் என்று நீ அடிக்கடி சொல்லி வந்தாய். எனவே நீ எங்களுக்கு உயிருடன் வேண்டும்” என்று மகனுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.இதனால் மனம் உருகி பெற்றோரின் அழைப்பை ஏற்று பயங்கரவாத அமைப்பில் இருந்த எதீசம் பிலால் நேற்று குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்