மூக்குப்பீறியில் சாலை விழிப்புணர்வு கூட்டம்
நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், பயிற்சி எஸ்ஐ ரகுபதி பாலாஜி ஆகியோர் பேசினர். மேலும் பாதுகாப்பு பயணத்திற்கான உறுதிமொழி படிவத்தை பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு அறிவுறுத்தினர். விழா முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஜான் செல்வராஜ் நன்றி கூறினார்.