புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு…!!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி.ராவத் ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேறுக் கொண்டார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஓம்பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஓ.பி.ராவத் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில், 23-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், சுனில் அரோராவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, அனைவரின் ஒத்துழைப்புடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
dinasuvadu.com