பாப் இசையின் மூடி சூடா மன்னனின் 35 வருடமாக முறியடிக்கப்படாத திரில்லர் ஆல்பம்..!!
பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்ஸன் இவடைய நடனமும்,பாடல்களும் அனைவரையும் கவர்ந்து எழுத்தது.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் உள்ளனர்.இந்நிலையில் மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாப் இசை உலகில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன் 1983ம் ஆண்டு டிசம்பர் 2 தேதி திரில்லர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஆல்பம் வெளியிடு வரை அவர் பெரிய அளவில் சாதனை எதுவும் செய்ய வில்லை தன் பாப் இசையில் வாழ்வா, சாவா என்ற நிலையில் தான் இந்த திரில்லர் இசை ஆல்பத்தை வெளியிட்டார்ஆனால் மைக்கேல் ஜாக்ஸன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வண்ணம் ஆறரைக் கோடி பிரதிகளாக விற்றுத் தீர்ந்தது ஆல்பம்.இதன் பின் இந்த உலகமே ஜாக்ஸனை திரும்பிப் பார்த்தது.இவருடைய ஆல்பம் வெளியாகிய 35 வருடங்கள் ஆகிய நிலையிலும் இந்தச் சாதனையை இன்றுவரை எந்த ஆல்பமும் முறியடிக்கவில்லை என்பது தான் தனிச் சிறப்பு இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.