உயர்நீதிமன்ற நீட்டித்த பதவி நீட்டிப்பு…!!எதிர்த்து தமிழக அரசு வழக்கு…!!! ஐ.ஜியை கண்டு அஞ்சுகிறதா அரசு..???
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதே போல் கொள்கை முடிவு என்ற பெயரில் இதுபோன்று எந்த முடிவும் எடுக்க முடியாது.என்று தீர்ப்பளித்த நிலையில் சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேல் ஒராண்டுக்கு நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் நேற்றுடன் பொன்மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.மேலும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது.
கடந்த 30-ம் தேதியே ஓய்வு பெற்றவருக்கு உயர்நீதிமன்றம் பணி நீட்டிப்பு செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களும்,கொள்ளைக்கு துணைபோகின்றர்களும் சிக்கிவிடுவோமோ என்று பதறுவதாக மக்கள் தங்களுக்குள் முனுமுனுக்கின்றனர்.