உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்த 50 பெண்களில் 4 பெண்கள் இந்திய வம்சாவளி…!!
உலக அளவில் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும், 50 பெண்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்துள்ளனர். நியூயார்கிலிருந்து வெளி வரும் பிரபல பத்திரிகையான, போர்ப்ஸ் உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் 50 பெண்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வம்சவளியை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியான’சிஸ்கோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பத்மஸ்ரீ வாரியர் (Padmasree warrior) ‘உபேர்’ நிறுவனத்தின் மூத்த இயக்குனர், கோமல் மங்டானி ( Komal Mangtani) ,’கான்ஃபுளுவென்ட்’ (Confluent) நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, நேஹா நார்க்ஹேடே,(Neha Narkhede) ‘டிராபிஜ்'(Drawbrige) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, காமாட்சி சிவராமகிருஷ்ணன் (Kamakshi sivaramakrishnan)ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
dinasuvadu.com