தமிழகத்தில் வரும் – 4ம் தேதி மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் 4- ஆம் தேதி மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதியில் மேலடுக்கு சுழற்சி, அரபிக்கடல் மாறும் அதனையொட்டி உள்ள பகுதியில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.