புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்…!!
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
மத்திய அரசு நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 100 நகரங்களில் செயல்படுத்த உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரிக்கு ஆயிரத்து 828 கோடி ரூபாய் என மத்திய அரசு திட்ட மதிப்பீடு செய்து, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிமிடெட் என்ற, அரசு சார்பு நிறுவனத்தை அமைத்தது. இந்த நிறுவனம் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஹைதராபாத் நிறுவனம் ஒன்றை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில், ஆயிரத்து 526 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
dinasuvadu.com