புதிய பிரபஞ்சத்தோடு மீண்டு(ம்) வருகிறான் ஸ்பைடர் மேன்! ரிலிஸ் அப்டேட் இதோ!!!

Default Image

சின்ன வயது குழந்தைகளுக்கு, ஏன் நமது பால்ய பருவத்தில் நமக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மைன் கதாபாத்திரம். ஸ்பைடர்மேனின் நூல் விடும் சாகசம், கட்டடத்திற்கு கட்டடம் அசால்டாக பாய்ந்து மக்களை காப்பாற்றுவது, குறும்பு நடிப்பு, பயங்கரமான வில்லன்களை வீழ்த்துவது என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஸ்பைடர்மேன்.
இந்த ஸ்பைடர்மேன் சீரிஸ், 2002ஆம் ஆண்டு முதல் பாகம் ரிலீஸானது. பிறகு அடுத்தடுத்து 2 மற்றும் 3 பாகங்கள் வெளியானது. மூன்றாம் பாகம் வரவேற்பை பெறாததால் அடுத்து சில வருடங்களுக்கு பிறகு தி அமேசிங் ஸ்பைடைர் மேன் என வெளியாகி வரவேற்பை பெற்றது.  பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மீண்டும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு அவ்வபோது கேப்டன் அமெரிக்கா சிவில் வார், அவென்ஞ்சர்ஸ் என சில படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் மறு உருவாக்கம் பெற்று ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் என வெளியானது. தற்போது அதன் அடுத்த பாகமாக ஸ்பைடர் மேன் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் கார்டூன் வடிவம் தயாராகி விட்டது. இந்த ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் 2D & 3D என இரண்டுவிதமாக வெளகயாக உள்ளது. இதன் ரிலீஸ் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்