நேற்று அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி …!இன்று  விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் …!ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

Default Image

உயர்மட்டக்குழுவில் இன்று  விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்று   ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குதல், மேலும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் மற்றும் அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்குதல், 21 மாத நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்குதல் மேலும் 5000 பள்ளிகளை மூடும் திட்டத்தைக் கை விட வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய டிசம்பர் 4ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் 106 சங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மட்டும் இந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தார்.
Image result for   ஜாக்டோ-ஜியோ
 
இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று  தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பங்கேற்றனர்.
இத பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறுகையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.எவ்வித கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. முதலமைச்சர் பழனிசாமி எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை .உயர்மட்டக்குழுவில் இன்று  விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்றும்  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today
Sri lanka President Anura kumara Dissanayake