மதுரை அரசுமருத்துவமனையில் போக்குவரத்து நெரிசல்
மதுரை அரசு மருத்துவமனையில், ரூ.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரசவ வார்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 6 மாடி புதியகட்டிடத்தில் கட்டிடத்தில், 850 படுக்கைகள் உள்ளன. மேலும் பழைய பிரசவ வார்டில் இல்லாத பல வசதிகள் இங்குள்ளது. ஆனால், உறவினர்கள் இருக்கவும், தங்கவும் வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இயற்கை மகப்பேறு, அறுவை சிகிச்சை மகப்பேறு, கர்ப்பப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால், மதுரை மற்றும் தென்மாவட்டங்களிலிருந்தும் நிறைய கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர்.
இந்த கட்டிடத்தில் பார்வையாளர் நேரம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை என ஒதுக்கப்பட்டது. மற்ற நேரங்களில் அனுமதி கிடையாது, இதனால் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உறவினர்கள், பிரசவ வார்டு முன்புறம் நடைபாதையில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் நெருக்கடி அதிகரித்து, ஆம்புலன்சுகள், டாக்டர்களின் கார்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள தனியார் செக்யூரிட்டிகளுக்கும், பார்வையாளர்களுக்கு தினமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. எனவே பிரசவ வார்டின் வளாகத்தினுள் ஆமபுலன்ஸ் நிற்கும் இடத்தை தவிர மற்ற இடத்தில் ஷெட் அமைத்து, அந்த இடத்தை பார்வையாளர்களுக்கு ஒதுக்குவதுதான், பிரச்னைக்கு தீர்வாக அமையும் என மருத்துவ பணியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.