கோவையில் டெய்ஸி மருத்துவமனை சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை டெய்ஸி மருத்துவமனை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், மற்ற மாநில மக்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை டெய்ஸி மருத்துவமனை சார்பில், நாகையில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு தற்காலிகமாக வீடுகள் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தார்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளது.