புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் ..! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன் பின்னர் அவர் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும்.புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, வாழை மரங்களின் எண்ணிக்கையை ஒவ்வொருவரும் அளிக்க வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து தென்னை கன்றுகள் வரவழைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.