இரண்டாவது போஸ்டரையும், ரிலீஸ் விவரத்தையும் வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் படக்குழு!!
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் படத்தில் கதாநாயகர்களுடன் டுயட் மட்டும் ஆடாமல், தான் சோலோ ஹீரோயினாக படத்தின் கதையின் நாயகியாகவும் நடித்து தனது திறமையை காட்டியவர்.
இவர் சோலோ ஹீரோயினாக நடித்து.வெளியான மாயா, டோரா, அறம் திரைபப்படங்களை தொடர்ந்து கொலையுதிர் காலம், அய்ரா ஆகிய படங்கள் தயராகி வருகின்றன. இதில் கொலையுதிர் காலம் திரைப்படத்தை பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் 2019 ஜனவரியில் வெளியாகும் என இரண்டாவது போஸ்டர் மூலம் தெரிவித்து உள்ளனர்.
source : cinebar.in