கஜா புயல் நிவாரண நிதி வழங்கிய சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய தூத்துக்குடி கலெக்டர்….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த பாலமுருகன், சுபபிரியா தம்பதியரின் மகன் யோகேஷுராம். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் மற்றும் தனது நண்பர்களிடம் பிரித்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கலெக்டர் சந்திப்பு நந்தூரியிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கலெக்டர் சந்திப் நந்தூரி அவர்கள், சிறுவனிடம் என்ன வாங்க வேண்டுமென்று இந்த பனைத்தை சேமித்தாய் என கேட்டதற்கு, சைக்கிள் வாங்குவதற்கு என்று கூறியுள்ளார். அந்த சிறுவனின் உண்டியலில் ரூ.806 இருந்தது. இதனையடுத்து, அந்த சிறுவனை அலுவலகத்திற்கு அழைத்து ரூ.4ஆயிரத்து 500 மதிப்புள்ள மிதிவண்டியை பரிசாக அளித்துள்ளார்.