கஜா புயல் பாதிப்பு …!ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நவம்பர் மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினார்…!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமது நவம்பர் மாத சம்பளத்தை வழங்கினார்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமது நவம்பர் மாத சம்பளத்தை வழங்கினார்.