திரையரங்கை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்……!!!
2.0 திரைப்படம் திருச்சி மணப்பாறையில், மனப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள டி.டீ.எஸ் என்ற திரையரங்கில் வெளியிடப்படயிருந்தது. 396 இருக்கைகள் ரசிகர்களுக்குங்க ஒதுக்கப்பட்டு காலை 8 மணிக்கு ரசிகர்கள் காட்சியாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில், திரையரங்க நிர்வாகம் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகளை பொதுமக்களுக்கு சிறப்பு காட்சி என விற்பனை செய்துள்ளதாம். இதனையடுத்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகிகள் பாஸ்கர் மற்றும் கணேஷ் தலைமையில் புதன்கிழமை திரையரங்கை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகள் வெளிநபர் விற்பனைக்கு அளிப்பதில்லை என திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து ரசிகர்கள் களைந்து சென்றனர்.