உடல் எடையை குறைக்கணும்னு ஆசைப்படுகிறீர்களா….? அப்ப இந்த டீ குடிங்க….!!!
உடல் எடையை குறைப்பதற்காக பலர் பலவழிகளில் முயற்சித்து வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பெரிய கவலையே உடல் எடை தான். ஆனால் இதற்காக பல வழிகளில் சிகிச்சை பெற்றாலும் இதற்கான முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு கிடைப்பதில்லை.
தேவையான பொருட்கள் :
- பட்டை – 2
- இஞ்சி – சிறிய துண்டு
- பிளாக் டீ – 1 டீ ஸ்பூன்
- எலுமிச்சை – 2 துண்டுகள்
- புதினா – 5 இலைகள்
- தேன் – தேவையான அளவு
செய்முறை :
பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க வைத்து, அது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு பிளாக் டீ ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். பின் அதனை எடுத்து வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் கலந்து குடிக்க வேண்டும்.