அசத்தும் திமுக….மேகதாது விவகாரம்….தொடங்கியது அனைத்து கட்சிக்கூட்டம் ….9 கட்சிகள் பங்கேற்பு…
மேகதாது_வில் மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அணை கட்ட ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து , மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டமானது இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.இதில் மதிமுக , விசிக , சிபிஐ , சிபிஐஎம் , காங்கிரஸ் , மமக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் பங்கேற்றன.அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கும் , மனித நேய மக்கள் கட்சி-யும் பங்கேற்றுள்ளது.தோழமை கட்சியின் தலைவர்களான வைகோ , திருநாவுக்கரசர் , முத்தரசன் , தொல்.திருமாவளவன் பங்கேற்பு பாலகிருஷ்ணன் அப்துல் சமத் , வீரபாண்டியன் அதேபோல திமுகவின் துரை முருகன் ,DR.பாலு அண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.இந்த கூட்டம் முடிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
DINASUVADU.COM