ஒரு காட்சிக்காக 1 லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது! 2.O பிரமாண்டம் பற்றி கலை இயக்குனர் தகவல்!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்துராஜ் படத்தினை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்க சுமார் 1 லட்சம் செல்போன்கள் அதில் பயன்படுத்தப்பட்டன எனக்குறிப்பிட்டார்.
sisour : cinebar.in