தமிழக அரசியலில் பரபரப்பு …!மு.க. ஸ்டாலினுடன், வைகோ திடீர் சந்திப்பு …!

Default Image

திமுக தலைவர் ஸ்டாலினுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி அரசியல் கூட்டணி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு திமுகவின் பொருளாளர் துரைமுருகன் திமுக கூட்டணியில் மதிமுக_வும் , விடுதலைசிறுத்தை கட்சியும் திமுகவுடன் கூட்டணியில் இல்லை என்று கூறினார்.திமுகவுடன் காங்கிரஸ் கட்சியும் , முஸ்லீம் லீக்கும் தான் கூட்டணி மற்ற கட்சிகள் எங்களின் நண்பர்கள் என்று கூறினார்.இது தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதிமுக தலைவர் வைகோ துரைமுருகன் பேசியதில் தமிழகம் முழுவதும் மதிமுக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர் என்றார்.தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோ பேசும் போது நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் சொல்லட்டும் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.அதை தொடர்ந்து மதிமுக நடத்தும் ஆளுநர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வருகிறார்.இந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்