கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ஸ்ரீ ரெட்டி…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். எவ்வளவு உதவி செய்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு சில காலங்கள் ஆகும் என்று தான் கூறப்படுகிறது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா திரையுலகில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, விஜய் சேதுபதி, கமல் என பல பிரபலங்கள் உதவிகள் செய்து வந்த நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி புயலால் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு அரிசி, தண்ணீர், பிஸ்கட் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.