மேகதாது அணை…தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை…கர்நாடக அரசு தயார்…!!

Default Image

மேகதாது ஆணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச தயாரார் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்  காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கு தமிழகத்தின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், மத்திய நீர்வள ஆணையம் இத்திட்டம் குறித்த  வரைவுவை  தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசிடம் பேசுவதற்கு நேரம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்