இந்தியாவில் களமிறங்குகிறது சுஸுகி ஜிக்ஸர் 250! அதன் முக்கிய தகவல்கள்!!
கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க பட்ட சுஸுகியின் ஜிக்ஸர் 150 மாடல் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக் ஆகும். தற்போது வெளிநாடுகளில் மட்டும் விற்பனையான ஜிஎக்ஸ்ஆர் 250 மாடல் இந்தியாவில் ஜிக்ஸர் 250 என களமிறங்க உள்ளது.
இது அடுத்த வருட மத்தியில் இந்தியாவில் விறபனைக்கு வரவுள்ளது. இந்த புதிய ஜிக்ஸர் 250 மாடலானது, இரட்டை சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை சிலிண்டர் பிரியர்களுக்கு இந்த மடல் மிகவும் பிடித்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த பைக்கின் முன்புறத்தில் இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் சாதாரண ஃபோர்க்குகள் பயன்படுத்தப்படும்.
சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் மாடல்கள் போல இந்த புதிய மாடலும் நேக்கட் மற்றும் முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களில் ஒன்றாக விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்த மாடல் யமஹா எஃப்இசட் 25, கேடிஎம் 250 ட்யூக் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது.
DINASUVADU