டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது ..!உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள் .
இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,தமிழக சுகாதாரத்துறை பதில் மனுவை ஏற்றது.அந்த மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 301 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 345 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.