உலக சதுரங்க போட்டி….சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாணவி…!!
ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சபிதாஸ்ரீ, தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் இவர், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பங்கேற்று இந்திய அளவில் விளையாட தகுதியை பெற்றார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி உலகலளவிலான சதுரங்க போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற மாணவி சபிதாஸ்ரீ, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
DINASUVADU.COM