சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,சட்டவிரோத கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் வடபழனியில் 2017ம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.