பேரறிவாளன் கேட்ட 4 கேள்விக்கு ஆர்டிஐ ஓரு பதில்…!
தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என்று ஆர்டிஐ தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் ஆர்டிஐ மூலம் மத்திய உள்துறையில் பெற்ற பதிலில் ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.அதில், தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை.2016ல் பேரறிவாளன் 4 கேள்விகள் கொண்ட ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பியிருந்தார்.அதில் ஆர்டிஐ அவரின் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரிவித்துள்ளது.