தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் …! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கஜா நிவாரண நிதி தொடர்பாக நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் பேசியுள்ளேன்.மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும்.அதுவும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும்.இன்றைய கால கட்டத்தில் தேர்தல் சூழல் என்பது கூட்டணி இல்லாமல் முடியாது என்றும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.