மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள ‘நங்கை உணவகம்’…!!
தூத்துகுடியில் திருநங்கை ஒருவர் நடத்தி வரும் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் காயத்ரி. திருநங்கையான இவர் சுயதொழில் தொடங்குவதற்காக மாவட்ட சமூக நலத்துறை மூலம் 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வழங்கினார். இந்த தொகையை வைத்து, சவேரியார் புரத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்த காயத்ரி, நங்கை உணவகம் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கியுள்ளார்.
காலை மற்றும் மதிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நங்கை உணவகத்திற்கு வந்து உணவருந்தி செல்வதால், தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. சொந்த உழைப்பில் முன்னேற நினைக்கும் காயத்ரிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
dinasuvadu.com