உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் சந்திப் நந்தூரி
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் பயிரிட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பது தெரியவந்தால், உரக்கட்டுப்பாட்டு விதிப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆட்சியர் சந்திப் நந்தூரி.