பிக்பாஸ் மஹாத்-ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் படம்…!! பற்றிய தகவல் வெளியானது..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா தத்தா. இதே நிகழ்ச்சியில் சர்ச்சையாகவே நடந்து கொண்டவர் மஹாத் இதனால் ரெட்கார்ட் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பபட்டார்.
இவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு படவாய்ப்புகள் இவர்களை தேடி வந்தது.அப்படி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் படம் பற்றி தகவல் இன்னும்ம் உறுதி ஆகாமல் உள்ளது.
இந்த நிலையில் மஹத் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.அதில் மஹத் படத்தில் வடசென்னை வாலிபராகவும் நடிகை ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண்ணாகவும் நடிக்கிறார்களாம். படத்தினை பிரபு சி ராம் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளாராம். இந்த ஷூட்டிங் டிசம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளது என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.