பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் பைக் திருட்டு
பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை கடந்த 13ம் தேதியன்று தனது வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
பதட்டமடைந்த அவர், இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில் சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த குமார் மகன் விஜயன் ஆகியோரை கைது செய்தார்.