சர்ச்சையான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தொண்டும் ஜாக்லின் குறும்படம்…!!தடையை மீறி வெளிவந்தது..!!குறும்படம் இதோ..!!

Default Image

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.டெல்லியை தமிழகத்தில் இருந்து மிரட்டியவர்.பெண்களால் பெரிதும் விரும்பப்படுபவர்.இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர்.இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்ற இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ஆனால் இவருடைய மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

Related image

மேலும் மரணத்தில் பலருக்கு சந்தேகம் கேள்விகள் எழுந்தது.ஏனென்றால் 75 நாட்கள் மக்கள் கண்ணில் படாமல் வைத்துவிட்டு கடையில் இறந்துவிட்டார் என்றால் எப்படி நம்புவது என்று சாமானிய மக்களும் கேள்வியை முன்வைத்தனர்.ஆனால் கேள்வி கேள்வியாகவே உள்ளது. பதில் திருப்தி தரும் வகையில் இல்லை இந்நிலையில் இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது.

Image result for jayalalitha set chair

படமானது சந்தேக மரணம் என்ற டேக்லைனோடு வெளியாகிய இந்த குறும்படத்தை வெளியிட தடை  விதித்திருந்தனர்.ஆனால் படக்குழு நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டு அதிரடி காண்பித்தது.இந்த குறும்படத்தில்  நடித்தவர்கள் மற்றும் படத்திற்கு உதவியவர்கள் என அனைவருடைய வீட்டிற்க்கும் சென்ற காவல்துறையினர்,விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related image

மேலும்  குறும்படமான இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் தலைமறைவாகியுள்ளார். மேலும் இந்த குறும்படத்தை தில்லாக வெளியிட்டவர்கள் மதுரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது தற்போது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மர்ம மரணம் என்று சொல்லப்படும் ஜெயலலிதா மரணத்தில் பல முடிச்சுகள் எப்பொழுது அவிழ்படும் என்று மக்கள் உள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்