கஜாவிற்கு மத்திய அரசு ரூ.200 கோடி நிதியை அளித்துள்ளது…! ஒருவாரத்தில் மின் இணைப்பு..!!அமைச்சர் தங்கமணி தகவல்..!!

கஜா புயலால் தஞ்சை,நாகை,புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கஜாவின் சூறைக்காற்றில் சிக்கி சாய்ந்த மின் கம்பத்தால் 4 மாவட்ட மக்கள்  மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.ஆனால் மின்சாரத்தை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் மின்சாரத்துறை இரவு பகலாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில் புயல் சேதமடைந்த மாவட்டங்களில் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார்.மேலும்  பேசிய அமைச்சர் நிவாரணப் பணிக்காக  மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி வழங்கியுள்ளது .ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் அதிகளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment