கஜா புயல் சேத விவரங்களை தமிழக அரசு சரியாக மதிப்பீடு செய்துள்ளது..!அமைச்சர் ஜெயக்குமார்
கஜா புயல் சேத விவரங்களை தமிழக அரசு சரியாக மதிப்பீடு செய்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.சேத விவரங்களை தமிழக அரசு சரியாக மதிப்பீடு செய்துள்ளது.அதிமுக சார்பில் ரூ 55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.