மாணவர்களுக்குள் அடிதடி : போலீசார் வழக்குப்பதிவு
பள்ளி மாணவர்களுக்குள் இருக்கையில் அமர்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, அடிதடியாகி போலிஸ் வரை சென்றுள்ளது.
அருப்புகோட்டை அருகே குலசேகரநல்லூர் செல்ல இரண்டு 17 வயது மாணவர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் அந்த பேருந்தின் டிரைவர் இருக்கை பின் புறம் அமர்ந்தனர். அதே பேருந்தில் வரும் பச்சேரி மாணவர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இது அடிதடி வரை சென்று குலசேகரநல்லூர் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அருப்புகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.