“வினீத் கோத்தாரி” உயர் நீதிமன்ற புதிய நீதிபதி….நேற்று பதவியேற்பு…!!
வினீத் கோத்தாரிசென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நேற்று உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில்,தலைமை நீதிபதி தஹில் ரமணி உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு முடிந்ததும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, உச்ச நீதிமன்றத்துக்கே 3 தலைமை நீதிபதிகளை தந்த சிறப்பு சென்னை உயர் நீதிமன்றத்தையே சாரும் என்று தெரிவித்தார்.உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவ வேண்டும் என்று புதிய நீதிபதி வினீத் கோத்தாரி கேட்டுக் கொண்டார். புதிய நீதிபதியாக கோத்தாரி பதவியேற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 61 ஆக உயர்ந்துள்ளது.
dinasuvadu.com