கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு …! தமிழக அரசு பதில்தர உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை மதுரை மேலுரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்தார்.மேலும் காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும் தென்னை ஒன்றுக்கு ரூ.50,000 தரவும் கோரிக்கை விடுத்தார்.சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 26 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.