என்ன பண்ணுனாலும் உடல் எடை குறைய மாட்டிக்கிதுன்னு கவலைப்படுறீங்களா…? இனி அந்த கவலையா விடுங்க….!!!

Default Image

இன்றைய சமுதாயத்தில் பலரின் கவலை கட்டுப்பாடற்ற உடல் எடைதான். இதனால் தன்னுடைய வேலையை கூட செய்ய இயலாமல் அவதிப்படுவோர் அதிகமானோர். இவர்கள் பல வழிகளில் மருத்துவம் பார்த்து தீர்வு கிடைக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இந்த டீயை குடித்து பாருங்க, மாற்றத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.

டீ……!

அது என்ன டீனு யோசிக்கிறீங்களா..? இதற்க்கு அதிகமான பணமெல்லாம் செலவழிக்க வேண்டாம். நாம் பயன்படுத்தும் லவங்கம் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை வைத்து தான் இந்த டீ தயாரிக்கப்படுகிறது. செயற்கையான முறையில் உடலில் ஏற்படும் மாற்றத்தை விட, இயற்கை முறையில் ஏற்படும் மாற்றம் நிரந்தரமானது.

லவங்கப் பட்டையின் பயன்கள் :

லவங்கப் பட்டையை நாம் அதிகமாக  சமையலில் தான் பயன்படுத்துகிறோம். இதில் எசென்ஷியல் ஆயில், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள இந்த சத்துக்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரிஞ்சி இலையின் பயன்கள் :

இந்த இலை லாரல் என்ற செடியில் இருந்து கிடைக்கிறது. இந்த இலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும், எடையை குறைக்கவும் இந்த இல்லை காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லை ஒரு மருத்துவகுணம் கொண்ட இலை ஆகும்.

பிரிஞ்சி இலை டீ : 

தேவையான பொருட்கள் :

  • தண்ணீர் – ஒரு லிட்டர்
  • லவங்க பட்டை தூள் – 5 கிராம்
  • பிரிஞ்சி இலை – 6
  • தேன் – 25கிராம் (தேவைப்பட்டால் )

செய்முறை :

ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 5 கிராம் லவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அது பத்திற்கு வந்தவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும்.

இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் ஒரு க்ளாஸ் குடிக்க வேண்டும். அந்த நாளில் மற்ற நேரங்களில் மீதமுள்ள டீயை குடித்தால் போதும். இது குடித்த பின் சில நாட்களில் எடை குறைவதை நீங்களே உங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்