அமைச்சருக்கு எதிராக அவதூறு…அர்ச்சகர் சஸ்பெண்ட்..கேரளாவில் அடுத்த சர்சை…!!

Default Image
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல்படுத்துவதில் பல்வேறு முயற்சியை எடுத்து வருகிறது.குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக அம்மாநில  தேவசம் அமைச்சரை கோவில் அர்ச்சகர் விமர்சனம் செய்து  பேஸ்புக்கில் வெளியிட்டார். அர்ச்சகர் மாதவ நம்பூதிரி மோசமான வார்த்தைகளுடன் விமர்சனங்களை பேஸ்புக்கில் தெரிவித்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி தேவசம் போர்டு கூட்டதில் அமைச்சரை விமர்சனம் செய்த நம்பூதிரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு இறுதியில் அவரை சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்