அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா…1750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவிற்கு சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து ஆயிரத்து 750 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவில் தீபத்தை காண பல லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சென்னை கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மட்டும் 500 சிறப்புப் பேருந்துகளும், நாளை 750 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.தாம்பரத்திலிருந்து இன்று 200 சிறப்பு பேருந்துகள் நாளை 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
DINASUVADU.COM