கஜா புயல் தொடர்பாக 3 நாட்கள் மத்திய குழுவினர் ஆய்வு…!5 பேர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது..!வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
கஜா புயல் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில், மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 5 பேர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது.புயல் பாதித்த இடங்களில் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர் .மொத்தம் 3 நாட்கள் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். செவ்வாய் கிழமை மாலை முதலமைச்சரை சந்தித்து மத்திய குழு ஆய்வு அறிக்கையை இறுதி செய்கிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.