சிக்குகிறார் சசிகலா போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை
போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இரவு 9.30 மணிக்கு தொடர்ந்த சோதனை தொடங்கியது முதர்கட்டமாக அங்கு இருக்கும் அறைகளின் சாவி தினகரனிடம் இருப்பதால் அவரை அழைத்தனர் ,அடுத்தபடியாக போயஸ் கார்டனில் சோதனையை தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளனர்
ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்குச் செய்யப்படும் துரோகம் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “போயஸ்கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“தங்களின் ஆட்சியை பதவியை காப்பாற்றிக் கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களைச் செய்யக் காத்திருக்கிறார்கள்?” என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என்றும் தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், “ஜெயலலிதாவின் இல்லம் எங்களுக்குக் கோவில். அவரது அறை கர்ப்பக்கிரகம். நினைவில்லமாக மாற்றுவேன் என்று கூறிவிட்டு சோதனை நடத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.