அமெரிக்காவை சேர்த்த வாட்ஸாப் நிறுவனம் இந்தியாவில் அதன் தலைவரை அறிவித்துள்ளது!
உலகம் முழுவதும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தும் ஓர் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸாப். பேஸ்புக்கிற்கு கிழே செயல்படும் இந்த ஆப்பை இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி நபர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகமாக புரளிகள் போலி செய்திகள் பரவுவதாகவும், ஆதலால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியாவில் ஓர் அதிகாரியை நியமிக்கவும் மத்திய அரசு கூறிவந்தது.
அமெரிக்கைவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இந்தியாவில் பெரிய டீமை உருவாக்கி,தற்போது அதன் தலைவரை நியமித்துள்ளது. அபிஜித் போஸ் என்பவரை இந்தியாவின் வாட்சப் குழும தலைவராக நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக எஸ்டாப் எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற செயலி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் இவர் இந்தியாவில் வாட்சப் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்தியாவில் அதிகமாக பரவி வரும் வாட்சப் வதந்திகளை கண்டறிந்து அதனை தடுப்பதே இவரின் முதல் வேலையாக இருக்கும்.
DINASUVADU