நாளைக்குள் முழுமையாக மின்சார இணைப்பு….அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆறாவது நாளாக அங்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மின்சார இணைப்புகள் 70 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் முழுமையாக வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
dinasuvadu.com