கார்த்திகை மாத பிறப்பையொட்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்து உள்ள பிள்ளையார்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்பதை அருளும் ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்தே இருக்கும்.இந்த நடைமுறை மாலை அணிந்து கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் விரதம் மேற்கொள்கின்றனர்.எனவே பக்தர்களின் வசதிக்காக கற்பகவிநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடனே பகல் நேரம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும் மேலும் வருகிற ஜனவரி மாதம் 21ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்று கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU