நாமக்கல்லில் உணவக உரிமையாளரை தாக்கிய கும்பல்…!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சுண்டமேடு காந்திநகர் அருந்தியர் தெருவை சேர்ந்த பாபு என்பவரை திருச்செங்கோ மண்டாகபாளையத்தில் இயங்கிவரும் பங்காளி மண்சட்டி சமையல் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூலிபடையினர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டாய் என்று பொய்யாக குற்றம் சுமத்தி கடந்த 15-11-2017 அன்று காலை 10-00மணியிலிருந்து இரவு பத்துமணி வரை எந்த பழக்கங்களும் (அதாவது மது பீடி புகையிலை) இல்லாத பாபுவை வழுகட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்கவைத்து உருட்டு கட்டைகளாலும் தனது உடல்பலத்தாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள்.
இரவு 9:30 மணிக்கு மேல் பாபுவின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்து பாபுவின் மகன் பேருந்து வசதியின்றி சில கிலோமீட்டர் நடந்து சென்று உணவகத்தின் உரிமையாளரை சந்தித்து கேட்டபோதும் பாபுவின் மகனையும் கொலைமிரட்டல் விடுத்து துரத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் பாபுவும் அவரது மகனும் கொஞ்சி வீடு வந்துள்ளார்கள்.
இந்தநிலையில் பாபுவிற்கு வலி பொறுக்கமுடியாமல் 108-யை வரவழைத்து திருச்செங்கோடு அரசு மருத்துவபனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.